Treatment / regularization of hospitalization / quarantine period during COVID-19 Pandemic - DoPT Clarification dtd 07/06/2021

Treatment / regularization of hospitalization / quarantine period during COVID-19 Pandemic - DoPT Clarification dtd 07/06/2021



அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

கோவிட்  பெருந்தொற்று காலத்தில் பணிக்கு வராத ஊழியர்களின்  விடுப்பு  நாட்களை எவ்வாறு ஒழுகுபடுத்தலாம் என்ற முந்தைய ஆணைக்கு புதிய விளக்கத்தை DOPT &TRG 07.06.2021 தேதியன்று வெளியிட்டுள்ளது .அதன் சாராம்சத்தை உங்கள் பார்வைக்கு தருகிறோம் 

a ) அரசு ஊழியருக்கு கோவிட் பாசிட்டிவ் உறுதிசெய்ய பட்டநிலையில் அவர் அவரது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டிருந்தால் ......

(i )  அவருக்கு 20 நாட்கள் COMMUTED  விடுப்பு வழங்கலாம் (மருத்துவ சான்று இல்லாமல் வெறும் கோவிட் பாசிட்டிவ் என சான்று மட்டும் போதும் 

(ii ) COMMUTED  விடுப்பு இல்லாத பட்சத்தில் 15 நாட்கள் சிறப்புவிடுப்பு  அதனை தொடர்ந்து  EL /HPL யை (EL /HPL இல்லாத பட்சத்தில் EXOL )தொடர்ந்து 5 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் 

b )அரசு ஊழியருக்கு கோவிட் பாசிட்டிவ் ஆனபின் அவர் மருத்துவமனையில் இருந்தால் 

(i)அவருக்கு 20 நாட்கள் COMMUTED விடுப்பு வழங்கலாம் (மருத்துவ சான்று இல்லாமல் வெறும் கோவிட் பாசிட்டிவ் என சான்று மட்டும் போதும் ) 

(ii )COMMUTED விடுப்பு இல்லாத பட்சத்தில் 15 நாட்கள் சிறப்புவிடுப்பு  அதனை தொடர்ந்து  EL /HPL யை (EL /HPL இல்லாத பட்சத்தில் EXOL )தொடர்ந்து 5 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் .

(III) 20 நாட்களுக்கு பிறகும் விடுப்பு தேவைப்பட்டால் எஞ்சியுள்ள நாட்களுக்கு COMMUTED விடுப்பு வழங்கலாம் 

C ) குடும்ப உறுப்பினர்களுக்கு கோவிட் பாசிட்டிவ் என்றால் 

(i) 15 நாட்கள் சிறப்பு விடுப்பு  வழங்கலாம் .

(ii  தொற்று ஏற்பட்டவருடன் நேரடி தொடர்பில்  இருந்திருந்தால் 7 நாட்களுக்கு வீட்டில் இருந்து பணி செய்ததாக கணக்கில் கொண்டு பணி காலமாக   கருதப்படும் 

d )  கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் (Containment Zone ) வசிப்பவராக இருந்தால்  கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து  அந்தப்பகுதி  விலக்கி கொள்ளும் வரை  வீட்டில் இருந்து பணி செய்ததாக கணக்கில் கொண்டு பணி காலமாக   கருதப்படும் 

இந்த  உத்தரவு முதலாம் ஊரடங்கு பிறப்பித்த 25.03.2020 முதல் மறு உத்தரவு வரும் வரை  பொருந்தும் .இது பழைய காலங்களில் வேறு விடுப்புகள் வழங்கியிருந்தாலும் ஊழியருக்கு பயன்பெறும் வகையில் மாற்றிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது .இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட  மருத்துவ சான்றிதழ் இல்லாமல் எடுத்த EXOL நாட்கள் சேவைக்காலத்திற்கு கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும் .

இந்த உத்தரவினை தொடர்ந்து நமது இலாகா உத்தரவினை வெளிட்டபிறகு பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே எடுக்கப்பட்ட விடுப்பினை தங்களுக்கு பயனுள்ள விடுப்பாக மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம்

Post a Comment

Previous Post Next Post

Iklan In-Feed (homepage)

" target="_blank">Responsive Advertisement